• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.

  • Share this:
    ஒருநாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய அனல் மின் நிலையம் மற்றும் சூரிய மின் சக்தி மையங்களை நாட்டுக்கு இன்று  அர்ப்பணிக்கிறார்.

    என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலியில் தொடங்கப்பட்டாலும் அது தற்போது இந்தியா முழுவதும் தன்னுடைய மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி தோண்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அனல்மின் நிலையத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்துவந்த என்எல்சி இந்தியா நிறுவனம் தற்போது புதுப்பிக்கவல்ல சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்களை திருநெல்வேலி ராமநாதபுரம் தூத்துக்குடி மற்றும் விருதுநகர் பகுதியில் அமைந்துள்ளன.

    3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி மையங்களில் திருநெல்வேலியில் 300 மெகாவாட்டும் ராமநாதபுரத்தில் 209 மெகாவாட்டும் தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் தலா 100 மெகா வாட்டும் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நெய்வேலியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 8000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அனல் மின் நிலையத்தையும் இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் அங்கிருந்தவாறே காணொலி காட்சி மூலம் இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

    இந்நிலையில், தமிழக சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது எனவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுவதாகவும்’ அவர் கூறியுள்ளார்.

    Must Read: பிரதமர் வருகை: தமிழகம், புதுவையில் பலத்த பாதுகாப்பு - புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

     

    பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகையை ஒட்டி அங்கே மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: