ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ் மொழியின் மேன்மையும்... பிரதமர் மோடியின் மேற்கோள்களும்...

தமிழ் மொழியின் மேன்மையும்... பிரதமர் மோடியின் மேற்கோள்களும்...

தமிழ் மொழியின் மேன்மையும்... பிரதமர் மோடியின் மேற்கோள்களும்...

PM Modi | செம்மொழி தமிழின் சிறப்பை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரதமர் எடுத்துரைக்க தவறுவதேயில்லை. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு பட்டமளிக்க உள்ள நிலையில் தமிழக பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகள் உலகுக்கு உரைப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார். அது பற்றி சற்று திரும்பிப் பார்க்கலாம்.

பிரதமர் மோடி தேசிய அளவிலும், சர்வதேச மேடைகளிலும் இந்தியாவின் மேன்மைமிகு பாரம்பரியத்தையும், செழுமையான கலாசாரத்தையும் உரைக்க தவறியதே இல்லை. குறிப்பாக, தமிழக பாரம்பரியத்தையும், சிறப்பையும் பல இடங்களிலும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாகவே சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகத்தை பிரதமர் மோடி ஜனவரியில் திறந்து வைத்தார். பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் இருக்கையும் அமைக்க ஏற்பாடு செய்தார்.

இதையும் படிங்க : வானவேடிக்கை கூடாது.. தமிழகம் வரும் பிரதமர் மோடி.. போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த திண்டுக்கல்.!

பிரதமருக்கு திருக்குறள் மீது தீராக் காதல் உண்டு. இளைஞர்கள் திருக்குறள் பயிலவேண்டும் என பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வலியுறுத்தி வரும் பிரதமர் மோடி, குஜராத்தி மொழியில் திருக்குறளையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

74வது ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் மூவாயிரம் ஆண்டு தொன்மைவாய்ந்த கனியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிரை" உலகோர் கேட்க உரைத்தார். இதுபோல் தமிழகத்திற்கே உரித்தான பத்தமடை பாயை ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு மோடி பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சதுரங்க விளையாட்டிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கியதுடன் இந்தியாவின் செஸ் தலைநகராக தமிழகம் விளங்குவதாகவும் புகழ்ந்துரைத்தார்.

இதுபோல் செம்மொழி தமிழின் சிறப்பை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரதமர் எடுத்துரைக்க தவறுவதேயில்லை.

Published by:Karthi K
First published:

Tags: PM Modi, Tamilnadu