• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மோடி பிறந்தநாள்: கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை, எல். முருகன்

மோடி பிறந்தநாள்: கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை, எல். முருகன்

தூய்மை பணியில் மத்திய இணையமைச்சர் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

தூய்மை பணியில் மத்திய இணையமைச்சர் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

பிரதமர் மோடியின் கடந்த 7 ஆண்டு ஆட்சியில், தமிழக மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாளை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அபோது செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராகவும் பிரதமராகவும் 20 ஆண்டுகளை கடந்து இருக்கிறார்.

    அவரின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக இன்று முதல் அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளையும், அரசியல் வாழ்க்கையும் கொண்டாடும் விதமாக சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் கடந்த 7 ஆண்டு ஆட்சியில் தமிழக மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டி உள்ளதாகவும் கூறினார்.


    அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று நிறைய தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட படுவதாகவும் அந்த வகையில் தங்களுடைய சமூக நீதி தலைவர் மோடி தான் என தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று மாலை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசியில் உள்ள பாரத மாதா கோயிலில், 71 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றி அவர் நலமுடன் வாழ பாஜக தொண்டர்கள் பிரார்த்தனை செய்தனர். பாஜக எம்.பி. ரூபா கங்குலி, கஷி சங்கல்ப் எனும் மோடியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தககத்தை வெளியிட்டு, 71 கிலோ எடையிலான லட்டையும் வெட்டினார்.

    Must Read : மோடி 7 ஆண்டுகளிலும், யோகி 4 ஆண்டுகளிலும் ஒரு நாள் கூட லீவ் எடுக்கவில்லை!

    இதேபோன்று, மத்தியபிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் சிலர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். தொடர்ந்து, தடுப்பூசி வடிவில் 71 அடி நீளத்தில் நன்றி மோடிஜி எனும் வாசகம் அடங்கிய கேக்கையும் வெட்டினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: