Home » News » Tamil-nadu » PRIME MINISTER NARENDRA MODI PONGAL WISHES IN TAMIL SKD

இயற்கையோடு வாழவும், கருணை உணர்வு பெருகவும்... - பொங்கலுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என்று பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயற்கையோடு வாழவும், கருணை உணர்வு பெருகவும்... - பொங்கலுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
பிரதமர் மோடி
  • Share this:
நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிந்துவிடுதல்ல. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், தை 3-ம் தேதி காணும் என்றும் என்று அதற்கு தை 4-ம் தேதி திருவள்ளுவர் தினம் என்றும் ஆண்டுதோறும் தமிழர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தமிழர்கள் ஆண்டு முழுவதும் எத்தனை எத்தனை பண்டிகைக்களைக் கொண்டாடினாலும் தமிழர்களின் பண்டிகை என்பது பொங்கல்தான். அறுவடை நாளை சிறப்பிக்கும் ஒன்றாக பாரம்பரியமாக பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்துவருகிறது.

இந்தநிலையில், தமிழர் திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், பொங்கலுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 14, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading