PM Modi | அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

PM Modi | அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி

நேரு உள்விளையாட்டு அரங்க நிகழ்ச்சி மேடைக்கு வந்த  பிரதமர் மோடி, அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செய்தார்.

  • Share this:
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    டெல்லியிலிலுந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நநேந்திர மோடி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாரு கப்பற்படை தளத்திற்கு சென்றார்.

    சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சென்றார். பிரதமர் மோடியை சாலையில் கூடியிருந்த கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரறே்றனர்.

    இதை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்க நிகழ்ச்சி மேடைக்கு வந்த  பிரதமர் மோடி, அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செய்தார். பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி வரவேற்றார். அவருக்கு கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பரிசாக அளித்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அமைச்சர்கள், பா.ஜ.க கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி . இது முழுக்க முழுக்க உள்நாட்டிலே தயாரானது. மேலும் தமிழகத்தில் பல நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

     
    Published by:Vijay R
    First published: