செல்வமும் மகிழ்ச்சியும் நிலைக்க பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

செல்வமும் மகிழ்ச்சியும் நிலைக்க பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

நரேந்திர மோடி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சித்திரை திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். சித்திரை திருநாளை முன்னிட்டு ஒருசில கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், வீடுகளில் தோரணம் கட்டி, தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை அணிந்தும், வீடுகளில் பல வகை உணவு சமைத்து கடவுளுக்கு படைத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் அதிகமாக இருக்கும்போது, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்போது கோவில்களில் மக்கள் குவிவதைப் பார்க்க முடிகிறது.

    ஏற்கெனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், பிரதமர் மோடியும் ட்விட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு, ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: