தமிழகத்துக்கு பிப்ரவரி 14-ம் தேதி வருகைதரும் பிரதமர் மோடி

தமிழகத்துக்கு பிப்ரவரி 14-ம் தேதி வருகைதரும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14-ம் தேதி வருகை தருகிறார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அதேபோல, பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. அக்கட்சிகள் தேசியத் தலைவர்களை அழைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. காங்கிரஸைப் பொறுத்தவரை, அவர்களது கட்சியின் முகமான ராகுல் காந்தி பொங்கல் அன்று மதுரைக்கு அழைத்து வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வைத்து தேர்தல் பணியைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் தமிழகத்தில் ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மறுபுறம், பா.ஜ.க சார்பில் ஜே.பி.நட்டா இருமுறை வருகை தந்துள்ளார்.

  இருப்பினும், பா.ஜ.கவைப் பொறுத்தவரை மோடிதான் அக்கட்சியின் முகமாக அறியப்படுகிறார். இந்தநிலையில், பிப்ரவரி 14-ம் தேதி மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். அவர், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் தமிழக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

  அதேபோல, மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார் என்றாலும், தேர்தல் கணக்குகளும் அதில் இருக்கும் என்று தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: