தமிழரின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

news18
Updated: October 11, 2019, 12:16 PM IST
தமிழரின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
news18
Updated: October 11, 2019, 12:16 PM IST
தமிழரின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 12 பேர் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி அவர்களை வரவேற்கும் பொருட்டு நாங்குநேரியில் முகாமிட்டிருந்த தமிழக அமைச்சர்கள் இன்று சென்னை புறப்பட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இடைத்தேர்தல் பிரசாரத்தின் பொது மக்களோடு மக்களாக இருந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். அப்பொழுது தான் மகிழ்ச்சியாக பிரசாரம் செய்திட முடியும். மாமல்லபுரத்தை கண்டுபிடித்த நரசிம்ம பல்லவன் பெருமையை, தமிழன் பெருமையை இன்று உலக அரங்கில் எடுத்துச் செல்லும் பெருமை பாரத பிரதமர் மோடியையே சேரும் என்றார்.


கூட்டணி கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக மீது அதிருப்தி வெளிப்படுத்தியது குறித்து கேள்வி கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது அதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

Also watch

First published: October 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...