பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மேம்படும்: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மேலும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தர்மபுரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர், " தர்மபுரியில் போட்டியிட்டு தோல்வியுற்ற போதும், இந்தத் தொகுதியின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து போராடுவோம்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மேம்படும். தர்மபுரி தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். பாமக மீது தவறு இருந்தால் திருத்துக்கொள்வோம்.

மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து பாடுபடுவோம். தோல்வியுற்ற போதும் மக்கள் நல பணி தொடரும்.

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள். பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மேலும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்’’ என்று கூறினார்.

Also see... பாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள்

Also see...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: