முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அப்துல் கலாமின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் பேசினார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • TAMILNADU | Chennai

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதன் பின் நிகழ்ச்சியில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள், நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கியப்பங்காற்றுகிறார்கள் நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப்பங்கு உள்ளதாகவும் கூறினார்.

இன்றைய இளைஞர்கள் நாளை இந்தியாவின் உண்மையான வடிவத்தை உருவாக்கப்போகும் தலைவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, " பெற்றோர், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் ஆதரவையும் பங்களிப்பு மற்றும் ஆதரவையும் குறிப்பிட்டார்.

இந்த பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பங்களிப்பை குறிப்பிட்டு பேசிய மோடி, " இந்த நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், " கொரோனா பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு எதிர்நிலைகளை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது, அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும்" என்று தெரிவித்தார்.

புதிய மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; கட்டுப்பாடுகளை விதிப்பது வலிமையான அரசு அல்ல என்றும் கூறிய பிரதமர் உள்கட்டமைப்பை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்;மேலும் மாணவர்கள் கற்கும்போது இந்தியாவும் கற்றுக்கொள்வதாகவும் மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி எனவும் கூறி அவரது உரையை முடித்தார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, இடநெருக்கடி காரணமாக கலந்து கொள்ள முடியாத பட்டதாரி மாணவர்களைச் சந்திக்க பிரதமர் மோடி பல்வேறு வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

First published:

Tags: Anna University, PM Modi