Home /News /tamil-nadu /

பிரதமர் மோடி வருகை.. இந்த ரோடு பக்கம் மட்டும் போகாதீங்க.. சென்னைவாசிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

பிரதமர் மோடி வருகை.. இந்த ரோடு பக்கம் மட்டும் போகாதீங்க.. சென்னைவாசிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Narendra Modi : சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் உட்பட மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வருகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி  22 ஆயிரம் காவலர்களுடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகை தரும் சென்னை விமான நிலையம், சென்னையில் அவர் செல்லும் வழித்தடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி  மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். மாலை 5.15 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு செல்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். அங்கு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.நிகழ்ச்சி முடிந்ததும் 7.05 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறாா்.

    Must Read : விரைவில் தேசிய அளவில் ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் - திமுக எம்.பி திருச்சி சிவா பேச்சு

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையால் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் செல்வதை இன்று தவிர்க்க வேண்டும் என்றும், மாற்று வழியில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Narendra Modi

    அடுத்த செய்தி