Home /News /tamil-nadu /

தஞ்சாவூர் பொம்மையை மகளிர் சுய உதவிக் குழுவினர் எனக்கு பரிசளித்தனர்- நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

தஞ்சாவூர் பொம்மையை மகளிர் சுய உதவிக் குழுவினர் எனக்கு பரிசளித்தனர்- நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

தஞ்சாவூர் பொம்மையை பரிசளித்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    கொரோனா காலத்திலும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் பல்வேறு மொழிகள், கலாச்சாரம் உள்ளதாகவும், மொழி பன்முகத்தன்மையை வலுப்படுத்த பலர் பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

    தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து சுய உதவிக்குழுவினர் தனக்கு புவிசார் குறியீடு கொண்ட தஞ்சாவூர் பொம்மை பரிசு அனுப்பியதாகவும், அது பெண்கள் சக்தியின் ஆசிர்வாதத்தை தாங்கி நிற்பதாகவும் கூறினார்.

    இதற்காக தஞ்சாவூர் சுயஉதவிக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகக் கூறிய மோடி, தஞ்சாவூர் பொம்மை அழகாக இருப்பது மட்டுமின்றி, பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    மக்கள் அனைவரும், தங்கள் பகுதியில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், 7,500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளதாகவும், இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றும் கூறினார்.

    கடந்த ஆண்டில் மட்டும் 44 யுனிகான் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், கொரோனா காலத்திலும் கூட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செல்வத்தை உருவாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் மழை அளவு எப்படி இருக்கும்?

    மேலும், தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு வெற்றிகரமான சுய தொழில் முனைவோர் மட்டுமின்றி ஊரகப் பகுதியில் தங்கியிருந்து இளைஞர்களை சுயதொழில் முனைவோராக வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Modi

    அடுத்த செய்தி