திருப்பூர் பொதுக்கூட்டத்தில் வெற்றிவேல், வீரவேல் கோஷத்துடன் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி

மோடி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி பேசத் தொடங்கினார்.

 • Share this:
  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேச எழும்போது பா.ஜ.கவினர் வெற்றி வேல், வீரவேல் என்று கோஷம் எழுப்பினர்.

  மேடையிலிருந்து பா.ஜ.கவினர் வெற்றி வேல் என்று கோஷம் எழுப்ப கூட்டத்திலிருந்து வீரவேல் என்று கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து மேடையில் பேசத் தொடங்கும்போது பிரதமர் மோடி வெற்றி வேல், வீரவேல் என்று கோஷம் எழுப்பினார். அதனைத்தொடர்ந்து வெற்றி, வெற்றி, வெற்றி வேல் என்ற அவர் கோஷம் எழுப்ப அரங்கில் கூடியிருந்த தொண்டர்கள் வீர, வீர வீரவேல் என்று பதில் கோஷம் எழுப்பின்னர். அதைத்தொடர்ந்து பேசிய அவர், ‘திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டவர்க்ள வாழ்ந்த ஊர் இது. ஐ.நா சபையில் ஒரு சில வார்த்தைகள் தமிழ் மொழியில் பேசியதை பெருமையாக கருதுகிறேன். தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தைக் காப்பதில் உறுதிகொண்டுள்ளோம் என்று உருக்கமுடன் தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: