வெற்றிவேல்... வீரவேல்... என்று கூறி பேசத் தொடங்கிய பிரதமர் மோடி

வெற்றிவேல்... வீரவேல்... என்று கூறி பேசத் தொடங்கிய பிரதமர் மோடி

மோடி

கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்தில் வெற்றிவேல், வீரவேல் என்று கூறி பிரதமர் மோடி பேசத் தொடங்கினார்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக ஆளூனர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்றனர். கோவை கொடிசியா அரங்கில் 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார்.

  அதனைத் தொடர்ந்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், வெற்றிவேல், வீரவேல் என்று கூறி பேசத்தொடங்கினார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், ‘வணக்கம் தமிழ்நாடு... வணக்கம் கோயமுத்தூர்... கொங்கு மண் சிறந்த சிந்தனையாளர்களையும் கொண்டது. தமிழகம் எங்கும் உள்ள மக்களை இங்குள்ள ஆலயங்கள் இந்த பகுதிக்கு சுண்டி இழுக்கின்றது. தற்போது மின்துறை, துறைமுகம் நவீனமயமாக்கல் உட்பட பல பணிகள் துவங்கி வைத்தேன். இவை தமிழக மக்களின் வாழ்விற்கும், கண்ணியம் அளிக்கும் திட்டங்கள். தமிழக நாடு புதிய அரசை தேர்ந்து எடுக்க போகின்றது்.

  இந்திய மக்கள் வளர்ச்சியை மையபடுத்திய அரசையே விரும்புகின்றனர். வளர்ச்சிக்கு எதிரானவர்களை தள்ளிவைக்கவே இந்திய மக்கள் விரும்புகின்றனர். தேசிய முற்போக்கு அரசும் தமிழக அரசும் கூட்டாச்சிக்கு நல்ல உதாரணமாக இணைந்து செயல்படுகின்றது. சிறிய வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கின்றது.

  சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு இந்திய அரசு நிறைய உதவி நடவடிக்கைகள் செய்துள்ளது. கடனுதவி திட்டம் நிறைய பேருக்கு பலன் கொடுத்துள்ளது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் 3.5 லட்சம் சிறு, குறு தொழில்களுக்கு 14 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது. விரைவாக வழக்குகளை தீர்க்கும் சீர்திருத்தம் இந்த நிதி நிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. ஐவுளித்துறையில் 7 ஆண்டுகளில் உட்கட்டமைப்பை இந்த அரசு வலிமைப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளில் 7 ஐவுளி பூங்காகள் வந்துவிடும். இந்தியா சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் பெருமைப்படுகின்றது. சிறிய விவசாயிகளுக்கு வளமான, கண்ணியமான வாழ்க்கையினை இலக்காக வைத்து இந்த அரசு செயல்படுகின்றது. 11 கோடி விவசாயிகள் பிரதமரின் கிஷான் திட்டத்தால் பயன்அடைந்து இருக்கின்றனர்.

  தமிழகத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகின்றது. 12 லட்சம் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றது. தமிழ் பண்பாட்டில் பெருமைப்படுகின்றோம். தமிழர் திருவிழாக்கள் புகழ் பெற்றவை. பொறியியல், மருத்துவ கல்வியை உள்ளூர் மொழியிலேயே வழங்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: