ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூய்மையான நகர்புறங்கள் உருவாக்கப்படும்: தூய்மை இந்தியா 2.0 குறித்து பிரதமர் மோடி நம்பிக்கை

தூய்மையான நகர்புறங்கள் உருவாக்கப்படும்: தூய்மை இந்தியா 2.0 குறித்து பிரதமர் மோடி நம்பிக்கை

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம், தூய்மையான மற்றும் சிறந்த நகர்ப்புற இடங்களை ஏற்படுத்த, உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தையும், தண்ணீர் பாதுகாப்பு திட்டமான அம்ருத் 2.0-வையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம், புதியதாக 2.64 கோடி திடக் கழிவு சேமிப்புத் தொட்டிகளை அமைக்கவும், நகர்ப்புறங்களில் புதியதாக 2.68 கோடி பொது குடிநீர் குழாய்களை பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் பகுதியில், கழிவுநீர் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, நகரங்களுக்கான நீரைப் பாதுகாப்பது மற்றும் கழிவுநீர் ஆறுகளில் கலக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நகர்ப்பகுதிகளில் மலைகளை போன்று கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பதப்படுத்தப்பட்டு அகற்றப்படும் என்றார். 2014-க்குப் பிறகு இந்தியாவில் தினசரி கழிவுகளை பதப்படுத்துவது, 20-லிருந்து 70 சதவிகிதமாக அதிகரித்து இருப்பதாகவும், அதனை 100 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நகர்ப்புற வளர்ச்சி சமத்துவத்திற்கு முக்கியமானது என்ற, அம்பேத்கரின் கனவு இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

First published: