ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி

ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி

Rani Velunachiyar

Rani Velunachiyar

Rani Velunachiyar - இழந்த மண்ணை மீட்டு மீண்டும் அரியணை ஏறிய மகாராணி வேலுநாச்சியாரின் 282வது பிறந்த தினம் இன்று.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூறும் வகையில் அவரை போற்றி பிரதமர் மோடி தமிழில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை பொறுத்த அளவில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ராணி லக்‌ஷ்மி பாய் மற்றும் ராணி வேலுநாச்சியார். இவர்களில் இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார். ஏனெனில் வடக்கில் புகழ்பெற்ற ராணி லக்‌ஷ்மி பாய் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், ஆனால் அவருக்கு முன்னதாக 17ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயேயரை வீர தீரத்துடன் எதிர்த்தவர் ராணி வேலுநாச்சியார்.

இழந்த மண்ணை மீட்டு மீண்டும் அரியணை ஏறிய மகாராணி வேலுநாச்சியாரின் 282வது பிறந்த தினம் இன்று. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி ராணி வேலுநாச்சியாரை போற்றும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Also read:  மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மதபோதகரின் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்

வேலுநாச்சியார் வரலாறு:

ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் ஒரே மகளான வேலுநாச்சியார் 1730 ஜனவரி 3ல் பிறந்தவர். ஆண் வாரிசு போல ஆயுத பயிற்சி, வளரி, சிலம்பம், குதிரையேற்றம், அம்பு எய்தல் போன்ற போர் திறன்ககளையும், ஆங்கிலம், ஃபிரென்சு, உருது போன்ற மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார் வேலுநாச்சியார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத பெரியவுடையனத் தேவருடன் வேலுநாச்சியாருக்கு திருமணம் நடந்தது.

ஆங்கிலேயப் படையினரால் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட, சிவகங்கை சீமையையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால் 7 ஆண்டுகாலம் திண்டுக்கல், விருப்பாட்சி என பல்வேறு இடங்களில் தலைமறைவாக தங்கியிருந்து அங்கிருந்தபடியே சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி, மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவியை பெற்று அவரின் படைகளின் ஆதரவுடன் மீண்டும் சிவகங்கை வந்து ஆங்கிலேயப் படையுடன் போராடி இழந்த தனது அரசை மீண்டும் மீட்டவர் ராணி வேலுநாச்சியார். பெரும் போராட்டங்கள் நடத்தி தனது நாட்டை மீட்டெடுத்த ராணி வேலுநாச்சியார் டிசம்பர் 25 1796 அன்று மறைந்தார்.

Also read:  இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை

ராணி வேலுநாச்சியாருக்கு சிவகங்கை சூரக்குளம் என்ற கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை அருங்காட்சியகத்தில் ராணி வேலுநாச்சியார் பயன்படுத்திய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராணியின் நினைவாக கடந்த 2008ம் ஆண்டு இந்திய அரசால் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.

First published:

Tags: Modi, Sivagangai