• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மோடி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை குறித்து கோரிக்கை

மோடி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை குறித்து கோரிக்கை

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பிரதமர் மோடியுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு பெற்றது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.  தமிழகத்தில் புதிதாக யார் முதல்வராக பதவியேற்றாலும், உடனே டெல்லி சென்று அப்போதைய பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து கோரிக்கைவைப்பது ஒரு நடைமுறையாக இருந்துவருகிறது.

    மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருந்ததன் காரணமாக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வது உடனடியாக நடைபெறவில்லை. ஆனால், விரைவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று காலையில் தனிவிமானம் மூலம் காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காரில் தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து டெல்லியின் மின்டோ சாலையில் கட்டப்பட்டுவரும் தி.மு.க அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், 5 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திலிருந்து சென்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவருக்குமான பேச்சுவார்த்தை 25 நிமிடங்கள் நீடித்தது. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மோடியிடம் மனுவாக வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை, மேகதாது அணை, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய விவகாரங்கள் குறித்து மோடியிடம் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழ்நாடு இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: