• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரதமர் மோடி சென்னை வருகை: போக்குவரத்தில் மாற்றம் - பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்

பிரதமர் மோடி சென்னை வருகை: போக்குவரத்தில் மாற்றம் - பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. மேலும், 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Share this:
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நாளை சென்னைக்கு வருகை தர உள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையார் கப்பற்படை தளத்துக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து தரை வழி மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி வருகை புரிவதால் சென்னை விமான நிலையம், அடையார் கப்பற்படை தளம், நேரு விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அவர் செல்லும் பாதையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதாலும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாலும் மோடி வருகை தருவதால் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால் மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மோடி வருகையின்போது கொடுக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த வித அசாம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பெரியமேடு, திருவல்லிக்கேணி, மண்ணடி ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படையின் தென்மண்டல ஐ.ஜி அலோக் வர்மா தலைமையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
பிரதமரின் சென்னை வருகையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் கீழ்ப்பாக்கம் நாயர் பாலத்தின் வழியாக திருப்பி அனுப்பப்பட்டு பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட், அண்ணா சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை, பேசின் பாலம், எருக்கஞ்சேரி சாலை, அம்பேத்கர் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சிக்னல், பென்னி ரோடு, மார்சல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வரும் பிரதமரின் பாதுகாப்புக்காக சென்னை போலீசார் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தியும், சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்தும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் சந்தேகபடும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கும்படி பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: