Home /News /tamil-nadu /

பிரதமர் மோடி சென்னை வருகை : 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார்

பிரதமர் மோடி சென்னை வருகை : 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நாளை மாலை சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரவுள்ளார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள், 29 துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார், போக்குவரத்து போலீசார், சிறப்பு பிரிவு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், கமாண்டோ வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் என மொத்தம் 22,000 காவலர்களோடு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் ஆய்வு


பிரதமர் செல்லும் வழித் தடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நிகழ்ச்சி நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய் மொழி குறிப்பு- சீமான் வரவேற்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்று இரவிலிருந்து சென்னையில் உள்ள லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலில் போலீசார் தீவிர சோதனை செய்யவுள்ளனர். குறிப்பாக சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா? என கண்காணிக்கும் பொருட்டு இந்த சோதனையை மேற்கொள்ளவிருகின்றனர்.
மேலும், பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளிநல்லா வான்வழி வாகனங்கள் பறக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Chennai, Modi, Police

அடுத்த செய்தி