Home /News /tamil-nadu /

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

PM modi came chennai | சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார்.

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் செல்கிறார். இதனிடையே, அடையாறில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.



    முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி