மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மோடி, அமித்ஷா!

மோடி | மு.க.ஸ்டாலின்

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி , அமித்ஷா ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர்.

  இதுகுறித்து திமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசினார்.

  திமுக தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து முதலில் விசாரித்தார். தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து திமுக தலைவரும் கேட்டறிந்தார்.

  ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல் தந்துள்ளார் என்றும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்றும் திமுக தலைவர் அப்போது தெரிவித்தார். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்று திமுக தலைவர் கூறினார்.

  மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும்' என்று பிரதமரிடம் திமுக தலைவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது' என்று பிரதமரும் உறுதி அளித்தார்.

  இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், திமுக தலைவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்” இவ்வாறு திமுக விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: அமெரிக்காவிற்குத் தேவையான ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்க வேண்டும்: மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தல்
  Published by:Sheik Hanifah
  First published: