பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை

பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை

பிரதமர் மோடி

தமிழகத்துக்கு மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் வருகை தரவுள்ளார்.

  • Share this:
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரத்தில் நடைபெற உள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கபதற்காக பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக பாஜக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்நாட்டு வருகை தந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இரண்டு முறை தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார்.  கடந்த 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த பின்னர், இரண்டாவது முறையாக வரும் 25 ஆம் தேதி கோவை வரவுள்ளார். பிப்ரவரி 22 - ல் மேற்கு வங்கம், 25 ஆம் புதுவை மற்றும் 27 ஆம் தேதி கேரளா என தொடர் பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டபடி பா.ஜ.க செய்து வருகிறது.

அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற நிலையில், வரும் 21 ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், 28 ஆம் தேதி அமித் ஷாவும் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: