• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

கடந்த ஆண்டு 10 கிலோ கொய்யா பழங்கள் கொண்ட சின்னபெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பெரிய பெட்டி (25 கிலோ) ரூ.800-க்கும் அதிகமாகவும் விலைபோனது.

  • Share this:
கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான குட்டுபட்டி, மூங்கில்பட்டி, மூளையூர், வத்திபட்டி, சிறுகுடி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை கொய்யா அறுவடை உச்சத்தை அடையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பகுதியில் விளையும் கொய்யா பழங்கள் அதிக சுவை கொண்டவை. இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொய்யா பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. உள்ளூா் வியாபாரிகள் பலா் தோட்டத்துக்கே வந்தும் பழங்களை வாங்கிச் செல்வா். இருப்பினும் கொய்யா விற்பனைக்கு சென்னை கோயம்பேடு சந்தை முக்கிய மையமாக உள்ளது.

தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகழாண்டு மகசூல் நன்றாக உள்ளபோதும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Also read: இப்படியுமா கொள்ளையடிப்பாங்க?.. எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளையர்களின் பிளான்.. வெளியான புதிய தகவல்கள்..

கடந்த ஆண்டு 10 கிலோ கொய்யா பழங்கள் கொண்ட சின்னபெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பெரிய பெட்டி (25 கிலோ) ரூ.800-க்கும் அதிகமாகவும் விலைபோனது. தற்போது, சின்ன பெட்டி ரூ.150க்கும், பெரிய பெட்டி ரூ.400-க்கும் விலைபோகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கொய்யா சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் பழங்களை கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்கவும், நத்தம் பகுதியில் கொய்யா பழக்கூழ், பழரசம் தயாரிப்பு ஆலை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்தியாளர் - வசந்த சித்தார்த்தன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: