Home /News /tamil-nadu /

ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.80 வரை உயர்வு

ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.80 வரை உயர்வு

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்ந்தது

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்ந்தது

Chennai | தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் இனிப்பு வகைகளின் விலை  20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
ஆவின் நிறுவனம் வாயிலாக, பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பனீர் உள்ளிட்ட 200 வகையான பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை, ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை கடைகளிலும் விற்கப்படுகின்றன.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வரும் நிலையில் ஆவின் இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவது வழக்கம். இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் இனிப்பு வகைகளின் விலையை ரூ. 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.

குலோப் ஜாமுன் 125 கிராம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், ரசகுல்லா 100 கிராம் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், மைசூர் பாக்கு 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், சர்க்கரையில்லா பால்கோவா 1 கிலோ 520 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 80 ரூபாய் வரை உயத்தப்பட்டுள்ளது.

Also see...சாலையோர கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து.. வயநாட்டில் கோர விபத்து

இவ்வாறு 17 வகையான பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Aavin, Chennai, Diwali festival, Price hiked, Sweets

அடுத்த செய்தி