டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை 30 சதவீதம் உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்..

டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை 30 சதவீதம் உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்..

டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை 30 சதவீதம் உயர்வு

தமிழகத்தில் அனைத்து வகையான லாரிகளிலும் வாடகை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைத்து, டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறையில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களுக்கும், வாடகையை 30 சதவீதம் அதிகரிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் படிக்க...அதிமுக VS திமுக : இழுபறியில் இருப்பது எந்தக் கூட்டணி ?

  இந்த வாடகை உயர்வு, நேற்று நள்ளிரவில் அமலுக்கு வந்தது. லாரி உரிமையாளர்களின் இந்த நடவடிக்கை காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: