சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை 20 ரூபாய் வரை உயர்வு...!

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை 20 ரூபாய் வரை உயர்வு...!
வெங்காயம்
  • News18
  • Last Updated: December 3, 2019, 11:37 AM IST
  • Share this:
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தில் வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை ஏறு முகத்திலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இன்று 20 ரூபாய் வரை உயர்ந்து 60 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


எனினும் கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பார் வெங்காயம் இன்று சற்று விலை குறைந்து 100 முதல் 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல் மற்ற காய்கறிகளில் விலைகளிலும் ஏற்ற இறக்கம் உள்ளது. உருளை கிழக்கு கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்து 48 ரூபாய்க்கும், கேரட் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 10 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏனினும் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 230 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் விலையும் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் 5 ரூபாய் குறைந்து 40 ரூபாய், கொடைமிளகாய் 5 ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.இதே போன்று நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு பாக்ஸ் 250 முதல் 320 ரூபாயாக இருந்த நாட்டு தக்காளியின் விலை இன்று 400 முதல் 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நவின் தக்காளி ஒரு பாக்ஸ் 220 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 350 முதல் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

நாட்டு தக்காளி கிலோ 14 முதல் 16 ரூபாய் வரையிலும், நவீன் தக்காளி 22 முதல் 30 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்ததாகவும், அடுத்த 2 நாட்களில் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading