ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடர்ந்து 41 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடிக்கும் தங்கம் விலை... விரக்தியில் நகைப்பிரியர்கள்..!

தொடர்ந்து 41 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடிக்கும் தங்கம் விலை... விரக்தியில் நகைப்பிரியர்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

வாரத்தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 5 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 41 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள். இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Gold Price, Gold rate