ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்படும் - பால்வளத் துறை அமைச்சர் நாசர்

ஆவின் பால் பொருட்கள்

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை தொடர்பான, மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்தாட்சியில் செயல்படுத்தப்பட்ட விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில்,  கால்நடைகளை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கியதில் அரசு பணம் வீணடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். தரமற்ற பசு மற்றும் மாடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

  அதைதொடர்ந்து வெளியிட்ட அறிவிப்புகளின்படி, கால்நடைகளின் நலன் கருதி 7 கோடியே 76 லட்ச ரூபாய் செலவில், அனைத்து கிராமங்களிலும் கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தொலைதூர கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைக்காக, 50 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.  கால்நடைகள் மற்றும் கோழி இனங்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில், 25 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன.ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற 38 ஆயிரத்து 800 பெண்களுக்கு, 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

  Also Read : சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.. பேரவையில் குரல் எழுப்பிய பாமக உறுப்பினர்!

  பசுந்தீவன இருப்பை அதிகரிக்க, 18 தீவன வங்கிகள் நிறுவப்பட உள்ளன. கொளத்தூரில் சர்வதேச தரத்திலான வண்ணமீன் வர்த்தக மையம், அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் 5 கோடி ரூபாய் செலவில், தூர்வாரி, ஆழ்படுத்தி சீரமைக்கப்பட உள்ளது. பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு இரண்டாயிரம் வெளி மற்றும் உட்புறம் பொருத்தும் இயந்திரங்கள், மானியத்தில் வழங்கப்பட உள்ளன. உள்நாட்டு மீன் உற்பத்தியினை பெருக்கிட 100 பண்ணைக் குட்டைகளில், மீன்வளர்ப்பதற்கு இடுபொருள் மானியமாக 30 லட்ச ரூபாய் வழங்கப்படும் என, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  பால் உற்பத்தியாளர் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட உள்ளது. சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் அலகு 8 கோடி ரூபாயில் நிறுவப்படுகிறது. அம்பத்தூரில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் பிரிவு, சேலம் அம்மாபாளையத்தில் பால்பவுடர் தயாரிக்கும் பிரிவு 51 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

  Also Read : தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

  ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பணி இடங்களுக்கு, அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்து நீண்ட காலமானதாகவும், உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளதால் பொருட்களின் விலையை மாற்றி அமைப்பது அவசியம் எனவும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: