அதன்படி, குதி கால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் தரையை ஒட்டி அமர்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கும்போது மின்னலின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தரையில் சமமாக படுக்கக் கூடாது.
உங்களது கழுத்துக்குப் பின்னால் இருக்கும் முடியில் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் இருக்கும் இடத்தின் அருகில் மின்னலில் தாக்கம் உடனடியாக நிகழப் போகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். உடனடியாக நீங்கள் குதி கால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து தரையில் பதுங்குவது போல அமர்ந்துகொள்ள வேடும். முன்னெச்சரிக்கை இன்றி மின்னலின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
செவித்திறன் இழப்பு ஏற்படுவதைக் குறைத்துக் கொள்ள காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.
உடலுடன் மின்கடத்தும் பொருளின் தொடர்பு கூடாது.
மின்னல் தாக்கத்தின்போது உங்கள் குதி கால்களை ஒன்றாக சேர்த்து அமர்ந்து கொள்வதால், மின்சாரம் தரையை தாக்கி, பின்னர் ஒரு குதிகால் வழியாக உங்களது உடலுக்குள் நுழைந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லாமல் மற்ற குதிகால் வழியாக வெளியேறிவிடுகிறது.
மின்னல் தாக்கத்தின்போது உங்கள் குதி கால்கள் மட்டுமே தரையை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மின்னல் முதலில் தரையைத் தாக்கி, பின்னர் உடலைத் தாக்கும் என்பதால், மின்னல் தாக்கத்தின்போது தரையைத் தொடுவதைக் குறைத்துக் கொள்வதன் மூலம் உங்களது உடலில் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்பினைக் குறைக்க இயலும்.
குடையை பயன்படுத்தக் கூடாது. மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்கவும். நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.
மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.