3 நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை..

3 நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை..

ராம்நாத் கோவிந்த்

வியாழக்கிழமை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.  

 • Share this:
  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 3 நாள் பயணமாக இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா்.


   நாளை ஹெலிகாப்டரில் வேலூர் செல்லும் குடியரசுத் தலைவர் பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறாா்.

  நாளை மறுநாள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு  தனி விமானத்தில் மீண்டும் டெல்லி செல்கிறாா்.


  குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா். அவர்கள், சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்


  குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில்  3 நாள்  செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் குடியரசுத் தலைவரின்  பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
  Published by:Gunavathy
  First published:

  சிறந்த கதைகள்