குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 5 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர், சென்னை விமானநிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
இதற்காக குடியரசுத்தலைவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னையை வந்தடைந்தார். அவருக்கு உரிய மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வரவேற்பளித்தனர். பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ள அவர், மலை வரையில் அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சட்டசபை விழா அரங்கிற்கு 5 மணிக்கு செல்ல இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இதனால் சென்னையில், 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத்தலைவர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் சீரான இடைவெளியில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
Must Read : இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு
அன்படி, சென்னை விமானநிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை, விழா நடைபெறும் தலைமைச்செயலகம் வரையில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு மற்றம் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையிலேயே தங்குகிறார். பின்னர் நாளை காலை விமானம் மூலம் கோவை புறப்பட்டு அங்கிருந்து ஊட்டி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor Banwarilal purohit, MK Stalin, President Ramnath Govind