Home /News /tamil-nadu /

குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழ்நாட்டிலிருந்து திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா பெறும் வாக்குகள் எவ்வளவு?

குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழ்நாட்டிலிருந்து திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா பெறும் வாக்குகள் எவ்வளவு?

திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா

திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் யஷ்வந்த் சின்ஹாவும், திரவுபதி முர்முவும் பெறக் கூடிய வாக்குகளைத் தெரிந்துகொள்வோம்.

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிவடைகிறது. அதனால், குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. அதனையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் பா.ஜ.கவும் எதிர்கட்சியும் தீவிரமாக ஈடுபட்டனர். பா.ஜ.க சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல, எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் இருந்தாலும், அவரைத் தேர்வு செய்யும் தேர்தல் குடிமக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே, குடியரசுத் தலைவர் தேர்வு என்பது கட்சி யாரை ஆதரிக்கிறதோ, அவர்களைத் தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். அதுதான் வழக்கமாக இருந்துவருகிறது. அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு சாமானிய மக்கள் போட்டியிட முடியாது.

சட்ட ரீதியாக சாமானிய மக்கள் போட்டியிடுவதற்கு தடை ஏதும் இல்லாவிட்டாலும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை 50 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால், சாமானியர் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என்றே புரிந்துகொள்ளலாம். எம்.எல்.ஏக்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவையிலும் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும் வாக்களிப்பார்கள். எம்.பிகள் அவர்களுடைய மாநில சட்டப்பேரவையிலும் வாக்களிக்கலாம்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தியா முழுவதும் சுமார் 4,800 எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மக்களவைப் பொதுத்தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதிநிதிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும். ஏன், மாநிலங்களவை எம்.பிக்கள் தேர்வு குறித்துகூட நிறைய பேருக்குத் தெரியும். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்வு முறை பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கும்.

மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் வாக்கு மதிப்பு எல்லா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சமமாக இருக்கும். ஆனால், எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு ஒவ்வொரு மாநிலத்துக்கு மாறுபடும். எம்.எல்.ஏக்கள் ஒருவர்தான் என்றாலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்.எல்.ஏக்களின் வாக்கு எண்ணிக்கையின் மதிப்பு மாறுபடும். ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு என்பது ஒரு வாக்கு என மதிப்பிடப்படாது. மக்கள் தொகையின் எண்ணிக்கையைப் பொறுத்து எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு மாறுபடும்.

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எம்.எல்.ஏக்கான வாக்கு மதிப்பு 176 வாக்கு என்று கணக்கிடப்படும். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234*176- 41,184 வாக்குகள் ஆகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிர்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா அதிக வாக்குகளைப் பெறுபவராக உள்ளார்.

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி  159 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்படி, 159*176 - 27,984 வாக்குகள் கிடைக்கும். , எம்.பிக்களைப் பொறுத்தவரை மக்களையில் 38 எம்.பிக்கள் உள்ளனர். அதன்படி, 38*700 - 26,600 வாக்குகள் கிடைக்கும். மாநிலங்களவையில் 12 எம்.பிக்கள் உள்ளனர். 12*70- 8,400 வாக்குகளும் கிடைக்கும்.

அ.தி.மு.க கூட்டணி 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்படி, 75* 176 - 13,200 வாக்குகள் கிடைக்கும். மக்களவையில் ஒரு எம்.பியும், மாநிலங்களவையில் 6 எம்.பிக்களும் உள்ளனர். அதன்படி, 7*700 - 35,500 வாக்குகள் கிடைக்கும்.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு 62,984 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு 48,700 வாக்குகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்திய அளவில் திரவுபதி முர்மு 60 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர்கள் தங்கள் கட்சி உத்தரவை மீறி தன்னிச்சையாக வாக்களிக்கும் பட்சத்தில் வாக்குகள் விகிதம் மாறுபடும்.
Published by:Archana R
First published:

Tags: Draupadi Murmu, President Election, Yashwanth Sinha

அடுத்த செய்தி