முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குன்னூரில் மோசமான வானிலை.. ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் பயணம் திடீர் ரத்து..

குன்னூரில் மோசமான வானிலை.. ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் பயணம் திடீர் ரத்து..

குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து

குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து

President Kunnor Trip Cancel | மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

 குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து  மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.பின்னர் மகா சிவராத்திரியையொட்டி நேற்றிரவு ஈஷா யோகா மையத்துக்கு சென்று சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வதாக இருந்தது. இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 10:30 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் வருகை புரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், குன்னூர் காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியாது என்பதால் குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coonoor, President Droupadi Murmu