முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு வந்தார் குடியரசு தலைவர்... வேட்டி - சட்டையில் சென்று வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு வந்தார் குடியரசு தலைவர்... வேட்டி - சட்டையில் சென்று வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு தலைவரை வரவேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ்

குடியரசு தலைவரை வரவேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ்

President Droupadi Murmu in Madurai | தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு முதன் முறையாக இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். டெல்லியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்ட அவர் மதுரை விமான நிலையத்திற்கு 11.30 மணிக்கு வந்தடைந்தார்.

குடியரசு தலைவரை தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி - சட்டை அணிந்து சென்று தமிழ்நாடு ஆளுநர் ரவி  வரவேற்றார். அவருடன்  அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர்,  சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு அங்கிருந்து 2 மணிக்கு சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வருகை தந்து தனி விமானம் மூலமாக கோயம்புத்தூர் புறப்பட்டு செல்கிறார்.

First published:

Tags: Madurai, President Droupadi Murmu