வரும் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருகிறார்.
கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காகக் பிப்ரவரி 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஆண்டுதோறும் கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில் நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர். அதன்படி வரும் 18ஆம் தேதி கோவை ஈஷா மையத்தில் கொண்டாடப்படவுள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்ளவுள்ளார்.
டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் வரவுள்ள அவர், முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும், அதன் பிறகு அவர் கோவை புறப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரௌபதி முர்மு முதன் முறையாகத் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Draupadi Murmu, Isha yoga centre, Maha Shivaratri, Tamilnadu