முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சஞ்ஜிப் பானர்ஜி இடம் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சஞ்ஜிப் பானர்ஜி இடம் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சஞ்ஜிப் பானர்ஜி

சஞ்ஜிப் பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி. கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். 2023ஆம் ஆண்டு ஓய்வு பெறவுள்ள இவரை தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.75 நீதிமன்றங்களோடு 'சார்டர்ட் உயர் நீதிமன்றம்' என்ற பெருமை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நான்கு நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்ஜீப் பானர்ஜியை மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி ஏற்கனவே 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்தநிலையில், சஞ்ஜிப் பானர்ஜி மேகலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

First published: