ராகுல் காந்தி வருகை: 430 வீரர்கள்: 788 காளைகள் - நாளை ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம்

ராகுல் காந்தி வருகை: 430 வீரர்கள்: 788 காளைகள் - நாளை ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம்

கோப்புப் படம்

மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 • Share this:
  தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் மாடம் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காளைகள் களத்தில் நின்று விளையாடும் இடங்களில் மஞ்சி-களைக் கொட்டி நிரப்பியுள்ளனர்.

  போட்டி நடைபெறும் இடத்தை சுற்றி ஆங்காங்கே குடிநீர், நடமாடும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பார்வையிட உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரத்தை தொடர்ந்து 15ம் தேதி பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: