முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உச்சநீதிமன்ற உத்தரவு.. அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்க இபிஎஸ் தரப்பு எடுத்த அதிரடி முடிவு..!

உச்சநீதிமன்ற உத்தரவு.. அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்க இபிஎஸ் தரப்பு எடுத்த அதிரடி முடிவு..!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக கருத்து கேட்கும் படிவம் இன்று விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை, பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

அதன்படி, அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் தரப்பில் கருத்து கேட்கும் படிவம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு, திங்கட்கிழமைக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக கருத்து கேட்கும் படிவம் இன்று விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami