“தேமுதிகவை தொட்டவர்களின் வரலாறு இதுதான்” துரை முருகன் வீட்டில் ரெய்டு குறித்து பிரேமலதா கருத்து

விஜயகாந்த் பிரசாரப் பயணம் குறித்து தலைமைக்கழகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்றும் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்றும் கூறினார்.

“தேமுதிகவை தொட்டவர்களின் வரலாறு இதுதான்” துரை முருகன் வீட்டில் ரெய்டு குறித்து பிரேமலதா கருத்து
பிரேமலதா விஜயகாந்த் (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: April 2, 2019, 7:29 PM IST
  • Share this:
தேமுதிக மற்றும் விஜயகாந்தை தொட்டவர்களின் நிலை இதுதான் என்பதற்கு சான்றாக துரை முருகன் வீட்டில் ரெய்டு நடந்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.கவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டு வருவதாகவும், அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அதிகளவு ஆதரவு உள்ளதாகவும், நிச்சயம் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.


படிக்க... ரபேல் புத்தகத்துக்கு தடை

இன்னும் எத்தனை கோடி பிடிபடப் போகின்றது என்பது புரியாத ஒன்றாக தொடந்து சோதனை நடைபெற்று வருகின்றது என்றும் துரை முருகன் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து பேசினார்.

மேலும், “தேர்தல் நேரத்தில் தே.மு.தி.கவை எந்த அளவுக்கு அவமானம் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு துரைமுருகன் அவர்கள் விமர்சித்தார். இன்று வாக்களர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் அவரின் வீட்டில் இருந்து கைப்பற்றபட்டதையடுத்து அவர் அவமானப்பட்டு நிற்கிறார்” என்றும் காட்டமாக விமர்சித்தார்.படிக்க... மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்குபவர்களுக்கும் பென்ஷன்...!

“தேமுதிக, விஜயகாந்தை தொட்டவர்களின் வரலாறு இதுவரைக்கும் இதுதான் என்பதற்கு சான்றாக ரெய்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும் கோடிக்கணக்கான பணம் கைபற்றபட்டுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தலை, ரத்து செய்யக்கூடாது

என்றும், இதனால் அனைத்து வேட்பாளர்களும் பாதிக்கபடுவார்கள் என்றும், பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட, தவறு செய்யத வேட்பாளரை மட்டும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் பிரேமலாதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.

விஜயகாந்த் பிரசாரப் பயணம் குறித்து தலைமைக்கழகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்றும் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்றும் கூறினார்.

Also See....


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading