தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்தவிழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘மாநகராட்சி, நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் இறங்குகிறது. மக்கள் கேப்டனுக்கும், தேமுதிக வேட்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
ஆளும் கட்சியின் செயல்பாடு சில விஷயங்களில் நல்லது செய்திருக்கிறது. மேலும் தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் மிகப் பெரிய மனக்குறை உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் கொடுக்கப்பட்ட ஒட்டுமொத்த பொருட்கள் தரமில்லாத பொருட்களாக இருந்ததாக பெண்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
மாநில அரசு உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்று காலம் காலமாகச் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் மழை வெள்ள காலங்களில் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பொறுப்பேற்று இரண்டு மாதம் மூன்று மாதம் என்றால் நாம் குறை சொல்லப்போவதில்லை, கடந்த 9 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள் ஆனால் இப்பொழுது வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. எந்த முயற்சியும் எடுக்கவில்லை, நீட் வைத்து அரசியல் தான் செய்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்று தெரிவித்தனர்.
உதயநிதி பிரச்சாரத்தில் மின்விளக்கு சரிந்து விபத்து - 5 பேர் காயம்
ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. நிச்சயமாக கும்பகோணம் ஆன்மீகத்தில் மிகப்பெரிய ஒரு நகரமாக விளங்குகிறது. இதை தனி மாவட்டமாக அறிவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த திருமண விழாவில் மாவட்டச் செயலாளர் சங்கர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு சுகுமார் நகரச் செயலாளர் நந்தகுமார் ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.