விஜயகாந்தை சூட்டிங் செல்லவிடாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவிடாமல் ஐ.டி சோதனை நடந்துள்ளது! பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

  • Share this:
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது சட்டம் தன் கடமையைச் செய்திருப்பதாகத் தான் கருதுகிறேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது முதன்மை ஆசிரியர் குணசேகரன் முன் வைத்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கேள்வி: விஜய் வீட்டில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனைக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உங்கள் பார்வை என்ன?


பிரேமலதா விஜயகாந்த் பதில் : வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்பது தான் எனது கருத்து. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் ஐடி ரெய்டு நடக்கிறது. நம்மூரில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது. அதற்குரிய விளக்கத்தை விஜய் சொல்ல வேண்டும். நடிகர் விஜய் ஒரு நடிகர் அவருக்கு வரும் வருமானம் எவ்வளவு, வரி சரியாக செலுத்துகிறாரா என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இங்கு எதுவுமே தவறு கிடையாது.

விஜய் இப்போது ஒரு நடிகர் தான். அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அப்படி இருக்கும் போது அவர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு.

கேள்வி: படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று விஜய்யை வருமானவரித்துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்துவது குறித்த உங்களது கருத்து என்ன?பிரேமலதா விஜயகாந்த் பதில் : விஜயகாந்திடமும் 3 முறை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அவர் சூட்டிங் போக ரெடியான போது ஒரு ஹோட்டலில் அவரை முழு நாளும் உட்கார வைத்து சோதனை செய்தார்கள். எங்களது திருமணத்துக்கு பின்னரும் ஒரு முறை வருமானவரித்துறை சோதனையை எதிர்கொண்டோம். அப்போது எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூட தடைவிதித்து சோதனை நடத்தப்பட்டது. இது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் முறைதான். பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. எனவே விஜய் இருக்கும் இடத்துக்குச் செல்கிறார்கள். அலுவலகம் சோதனையிடப்படுகிறது. இது ஐடி ரெய்டின் ஒரு முறைதான்.

First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading