தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு

பிரேமலதா விஜயகாந்த்

அவர் போட்டியிட விரும்பும் தொகுதியை குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல்...

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் தலைமை கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

  இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை கழகத்தில் இன்று (04.03.2021) விருப்ப மனு வழங்கினார்.

  உடன் கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.V.இளங்கோவன், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ், கழக துணை செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., மற்றும் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட, மகளிர் அணி, பகுதி, வட்டம், மற்றும் தொண்டரகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும்: கேரள பாஜக தலைவர் பேச்சு

   

  அவர் போட்டியிட விரும்பும் தொகுதியை குறிப்பிடாமல் விருப்பமனுவை தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: