தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் நோக்கத்தோடு அரசு செயல்படுகிறது: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்ற நோக்கத்தோடு சுகாதாரத்துறையினர் தன்னை தடுத்து நிறுத்தியதாகவும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானது எனவும் தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

 • Share this:
  தேர்தல் பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்ற நோக்கத்தோடு சுகாதாரத்துறையினர் தன்னை தடுத்து நிறுத்தியதாகவும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானது எனவும் தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “விருத்தாசலத்தில் கடந்த பத்தாம் தேதியில் இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். மக்கள் அமோக வரவேற்பு கொடுக்கிறார்கள். 2006-ல் இங்கு கேப்டன் வெற்றி பெற்றார். விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ரோடு வசதி, குடிநீர் வசதி இதையெல்லாம் செய்து கொடுத்தார். நான் செல்லும் இடங்களில் எல்லாம் அனைத்து மக்கள் கேப்டன் எங்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார் என்று கூறுகின்றனர்.

  தேமுதிக-அமமுக கூட்டணி அமோகமாக செயல்பட்டு வருகிறது, விருத்தாசலம் பகுதியில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.  நகரப்பகுதியில் அதற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை நாங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். கூட்டணிக் கட்சிகளிடம் இது பற்றி கூறியுள்ளோம் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

  எல்.கே.சுதீஷ்க்கு ஏற்கனவே இருமல் இருந்தது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனக்கு இருமல், சளி எதுவும் இல்லை. நான் கொரோனா தடுப்பூசி மருந்துகளும் போட்டுள்ளேன். ஆனால், என்னை வேண்டும் என்றே தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லக்கூடாது என்ற நோக்கத்தோடு சுகாதாரத்துறையினர் என்னை தடுத்து நிறுத்தினர் நான் பிரச்சாரம் முடித்து விட்டு வருகிறேன் என்று கூறியும் அவர்கள் கேட்காமல் என்னை கொரோனா பரிசோதனை செய்ய கூப்பிட்டார்கள்

  234 தொகுதி வேட்பாளருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா என்றால் இல்லை. ஆனால் எங்களை வேண்டும் என்றே பிரச்சாரத்திற்கு போவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, இந்த அரசாங்கம் நடந்து கொண்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் இது சட்டத்திற்கு புறம்பானது.

  கொரோனா பரிசோதனை 5 மணி நேரத்தில் உங்களுக்கு ரிசல்ட் கொடுத்துவிடுவேன் என்று சொன்னார்கள் ஆனால் ரிசல்ட் மறுநாள் வரைக்கும் எனக்கு கொடுக்கவில்லை.

  Must Read : ஆ.ராசா தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.. பெண் இனத்தையே கொச்சைப்படுத்துகிறார் -அ.தி.மு.க புகார் மனு

   

  நான் தனியார் மருத்துவமணையில் கொரோனா பரிசோதனை செய்தேன், அவர்கள் அன்று இரவே ரிசல்ட் கொடுத்தார்கள் அதனை தெரிந்து கொண்டு, சுகாதாரத்துறையினர் எனக்கு கொரோனா இல்லை என்று சான்றிதழ் கொடுத்தனர். எங்களை பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடு இதனை செய்துள்ளார்கள்.” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: