• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாம் ஒருதாய் பிள்ளைகள், நீரால் மட்டும் ஏன் பிரிவினை? - கர்நாடகாவை கேள்வி கேட்கும் பிரேமலதா

நாம் ஒருதாய் பிள்ளைகள், நீரால் மட்டும் ஏன் பிரிவினை? - கர்நாடகாவை கேள்வி கேட்கும் பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

கர்நாடகா மேகதாதுவில் அணைக்கட்டக் கூடாது, கர்நாடக முதலமைச்சரின் பேச்சு சட்டவிரோதமானது.

  • Share this:
    நாம் ஒருதாய் பிள்ளைகள் என்றும், நீரால் மட்டும் ஏன் பிரிவினை? என்றும் கேள்வி எழுப்பிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, நதிகளை இணைந்து அனைத்து மாநிலங்களுக்கு சரியான நீரை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில், தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசினார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரின் ராம்நகரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, ஓசூர் வந்த பிரேமலதா விஜயகாந்த், பேரணியாக ஓசூர் ராம்நகருக்கு டிராக்டர் ஓட்டியபடி கண்டன ஆர்ப்பாட்ட மேடைக்கு ஊர்வலமாக வந்தார். அதனைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “தமிழகம் ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது அணை கட்டினால் பாலைவனமாகிவிடும். கர்நாடகாவை நம்பியே தமிழ்நாடு உள்ளது. காவிரி நீரால் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பயன்பெறுவதால் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. தஞ்வாவூருக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக் குறியாகும்.

    மத்தியில் பாஜக, கர்நாடகாவிலும பாஜக அரசு ஆளுகிறது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று பேசுகிறார். தமிழகத்தின் சார்பில் எச்சரிக்கிறோம், மாநில எல்லைக்கு வந்தவர்கள் கர்நாடகத்திற்கு வர முடியாதா? நாம் ஒருதாய் பிள்ளைகள். நமக்குள் எந்த பிரவினையும் வேண்டாம்.

    Must Read : புளியந்தோப்பு கே.பி. பார்க் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

    தமிழக முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் உருவாகமல் தடுக்க வேண்டும். அதற்காக கர்நாடகா மேகதாதுவில் அணைக்கட்டக் கூடாது. கர்நாடக முதலமைச்சரின் பேச்சு சட்டவிரோதமானது. அணைக்கட்டுவதை நிறுத்த வேண்டும். தமிழக மக்கள் இழிச்சவாயர்கள் அல்ல. வஞ்சிக்க வேண்டாம். நாம் இனத்தால் இரத்தத்தால், மூச்சுக்காற்றால் ஒன்று தான். நீரால் மட்டும் ஏன் பிரிவினை?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய நதிகளை இணைந்து அனைத்து மாநிலங்களுக்கு சரியான நீரை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா அல்லது, சுபாஷ்சந்திர போசாக இருக்க வேண்டுமா? கர்நாடக முதல்மைச்சர் பொம்மை அவர்களே பொம்மையாக இருக்க வேண்டாம். காவிரி என்பதை நமது அண்ணை அதற்காக எதையும் செய்வோம்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: