Home /News /tamil-nadu /

ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது: அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக்கூடாது- பிரேமலதா விஜயகாந்த்

ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது: அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக்கூடாது- பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக் கூடாது, அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக் கூடாது என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், ‘விஜயகாந்த் நலமாக உள்ளார் என்றும் அவர் மாதம்தோறும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லுவது வழக்கம் தான் என்றும் கூறினார்.

    அதிமுக செய்த தவறுகளால்தான் இன்று அவர்கள் ஆட்சியை இழந்து வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் ஆட்சியில் இருந்திருப்பார்கள் என்று கூறிய பிரேமலதா தேமுதிக தான் உண்மையான எதிர்க்கட்சியாக தற்போது செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

    இந்த அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. யார் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும்.

    யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் முடிவு எடுப்பார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவு எடுப்பார் என கூறினார். மேலும் ஸ்காட்லாந்துக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்றைய மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியான நிலையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும்.

    இன்று மக்கள் வேலை இல்லாததால் குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்கு ஆன்லைன் ரம்மி போன்ற தளங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு நஷ்டமடைந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பை வழங்குவது குறித்து தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார் என கூறினார்.

    முதல்வர் குறித்து அருவெறுக்கத் தக்கப் பதிவு-உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியவரின் மனு தள்ளுபடி

    மேலும் மதுரை ஆதீனம், ஆதினங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்றும் அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக்கூடாது என்றும் அவரவர் வேலையை அவரவர் செய்தாலே இந்த சர்ச்சைக்கு வேலை இருக்காது என்றும் கூறினார்.

    ஆளுநர் அவரது வேலையை செய்தாலே போதும், முதலமைச்சர் அவரது வேலை செய்தாலே போதும் எனக் கூறியவர் ஆளுநரை குறை சொல்லி ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களை குறை சொல்லி ஆளுநரும் மாறி மாறி குறை கூறிக் கொள்ளும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது என்றார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Premalatha Vijayakanth

    அடுத்த செய்தி