பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரோனா தொற்று இல்லை

பிரேமலதா-விஜயகாந்த்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 • Share this:
  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்வில் போட்டியிடுகிறார் பிரேமலதா.

  அதற்கான வேட்புமனு தாக்கலின் போது, அவரின் சகோதரர் எல்.கே.சுதீஸ்வுடன் வந்தார். இந்நிலையில், சுதீஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் பரிசோதனை செய்ய கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

  அதன் படி, பிரேமலதா விஜயகாந்த் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார், இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

  இதற்கிடையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: