Home /News /tamil-nadu /

ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்குப் பிறகும் முந்தைய அரசைக் குறை கூறுவதா- பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்குப் பிறகும் முந்தைய அரசைக் குறை கூறுவதா- பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

premalatha vijayakanth | ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்குப் பிறகும் முந்தைய ஆட்சியை குறை கூறுவது முறையல்ல என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துடன் இணைந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக் கூறினார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘2022 ல் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுவிட்டோம்.
    தமிழகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கு அதிமுக, திமுகதான் பொறுப்பு. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 8 மாதமாகிவிட்ட நிலையில் எத்தனை நாள் கடந்த ஆட்சியையே குறை சொல்லிக் கொண்டிருப்பார். திருவொற்றியூர் கட்டட விபத்தை பார்வையிடச் செல்லாத முதலமைச்சர் , திரு.வி.க நகருக்கு திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக நேரில் சென்றது தவறான முன்னுதாரணம். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படியான செயலில் ஈடுபட கூடாது.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டையொட்டி தொண்டர்களுடன் சந்திப்பு: கையை அசைத்து வாழ்த்து


    எதிர்கட்சியாக இருந்தபோது go back modi என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுக தற்போது ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் தயவு தேவைப்படுகிறது. தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். யாரை செயல் தலைவராக்குவது என தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் முடிவு செய்வர். 2026 ல் தனி அணி அமைப்போம் என்பது பாமகவின் உட்கட்சி முடிவு. அதில் நான் கருத்து கூற முடியாது .

    2026-க்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தலை தேமுதிக எப்படி எதிர்கொள்ளும் என்று அப்போது நிலைமையை பொறுத்து முடிவு செய்வோம். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடரை குறைசொல்லும் லெட்சனத்தில் அரசாங்கம் இருக்கிறது. யாராக இருந்தாலும் கமிசன், கரப்சனுக்கு அடிபணியாமல் நல்லாட்சி கொடுக்க வேண்டும்.

    நீட் , நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை முறையாக நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களுக்கு இருக்கிறது. திமுக ஆட்சியிலும் நீட் மரணம் தொடரவே செய்கிறது. நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதில் உறுதியான முடிவை திமுக, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். விஜயகாந்த் வந்ததற்கே இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. இதிலிருந்து கட்சி பலவீனமாக இல்லை என்பது தெரியவரும். தேமுதிக பலவீனமாக இருப்பதாக சிலர் கூறுவது பார்ப்போரின் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஆட்சியில் இருந்தோரே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயங்கினாலும் சவாலை எதிர்கொண்டு தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MKStalin, Premalatha Vijayakanth

    அடுத்த செய்தி