கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் எடப்பாடிக்கு இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கடும் விமர்சனம்

பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற்றது. தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளும் பலகட்டமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது. இந்தநிலையில்,, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தே.மு.தி.க பக்குவம் இல்லாமல் செயல்படுகிறது என்று விமர்சனம் செய்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் காலதாமதமாக விரும்பாத 4 தொகுதியை தே.மு.தி.க பெற்றது. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முன்பே பேச வேண்டும் என நான் வலியுறுத்தி பேசினேன். இந்த கூட்டணி சிக்கல் வர கூடாது என்பதற்கு நாங்கள் பல முயற்சியை மேற்கொண்டோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு பக்குவமே இல்லை என கூறினார். 2011ம் ஆண்டு விஜயகாந்த் கூட்டணி அமைந்ததால் தான் பிரச்சாரத்திற்கே செல்வேன் என ஜெயலலிதா கூறினார்.

  தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகளைக் கொடுத்து பக்குவமாக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றம் பக்குவம் எடப்பாடி பழனிசாமி இல்லை. 12 முதல் 13 தொகுதியில் இருந்து அ.தி.மு.க மேலே வரவில்லை. கடைசியாக 18 தொகுதி ஒரு ராஜ்யசபா என்ற நிலையில் 13 மட்டுமே அ.தி.மு.க ஒதுக்க முன் வந்தது. மேலும், எந்த தொகுதி என்ற தகவலும் இல்லை. கடைசி நிலை வரை தே.மு.தி.க தொடர்ந்து பேசி வந்தது.

  இந்த கூட்டணி சுமுகமாக செல்ல வேண்டும் என்று தான் நாங்கள் பக்குவமாக நடந்துகொண்டோம். எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு பக்குவம் தே.மு.தி.கவுக்கு கிடையாது. அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் விஜயகாந்திடம் பேசினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 18 சதவிகிதம் வாக்குகளை பெற்ற அ.தி.மு.க எவ்வளவு இடங்களில் போட்டியிடுகிறது. அ.ம.மு.க, தே.மு.தி.க மாபெரும் வெற்றி கூட்டணி’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: