ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர்களுக்காக பல மணிநேரம் காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணிகள்

அமைச்சர்களுக்காக பல மணிநேரம் காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணிகள்

அமைச்சருக்காக காத்திருந்த கர்ப்பிணிகள்.

அமைச்சருக்காக காத்திருந்த கர்ப்பிணிகள்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினர். பல இடங்களில் அமைச்சர்களின் வருகைக்காகக் கர்ப்பிணி பெண்கள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

  மதுரை வில்லாபுரம் தனியார் மண்டபத்தில் காலை 9 மணி முதலே கர்ப்பிணி பெண்கள் காத்திருந்தனர். நண்பகல் 12 மணியாகியும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வராததால், நிறைமாத கர்ப்பிணி பெண்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டனர். இது தொடர்பாக தங்களை அழைத்து வந்த அங்கன்வாடி பணியாளர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் தலா ஒருவருக்கு 2 பிஸ்கெட்டுகளை வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.

  இதேபோல், திருமங்கலம் சிவரக்கோட்டையில் காலை 10.30 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 1.30 மணியாகியும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவில்லை. இதனால் 5 மணி நேரமாக அமைச்சரின் வருகைக்காக கர்ப்பிணி பெண்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் சோர்வாக காணப்பட்டனர்.

  வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வீரமணி, சினிமா பாடலை பாடி விழாவைத் தொடங்கி வைத்தார். சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பாஸ்கரன், கருவுற்ற பெண்கள் அதிக சுமை தூக்க கூடாது, நடக்கக் கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரையைக் கேட்டால், அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள் என்று கூறினார்.

  இதேபோல், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Government valaikaapu, Minister sp velumani, Minister udhayakumar, Pregnant womens waited