முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உறவினர்கள் போராட்டம்

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: உறவினர்கள் போராட்டம்

கர்ப்பிணி பெண்

கர்ப்பிணி பெண்

எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து இடிந்து போயுள்ள அந்த பெண்ணின் கணவர், அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதார்.

  • Last Updated :

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால், கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்றிய விவகாரம் தொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கு ரத்தசோகை இருப்பதால், ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து கொண்டுவரப்பட்ட ரத்தம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்து அந்த பெண்ணுக்கு, கடந்த 3-ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, மீண்டும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது, அங்கு அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கர்ப்பிணியின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாலேயே கர்ப்பிணிக்கு எச்ஐவி ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு உறவினரை பார்க்க சென்ற இளைஞர், உறவினருக்காக ரத்தம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்காக அந்த இளைஞர் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவர், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போன் செய்து தன்னுடைய ரத்தத்தை யாருக்கும் ஏற்ற வேண்டாமென கூறியுள்ளார். ஆனால் எச்சரிக்கை கொடுக்கப்படும் முன்பாக அந்த ரத்தம் பரிசோதனை செய்யப்படாமல், சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுள்ளது.

எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து இடிந்து போயுள்ள அந்த பெண்ணின் கணவர், அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதார்.

Also Watch:

top videos

    First published:

    Tags: HIV, Sattur, Virudhunagar